Partners for Planning - பதிவுசெய்யப்பட்ட ஊனமுற்றோர் சேமிப்புத் திட்டம் (RDSP) அறிமுகம் - Tamil
YES!
Send me updates on new resources!
YES!
Send me updates on new resources!

பதிவுசெய்யப்பட்ட ஊனமுற்றோர் சேமிப்புத் திட்டம்

உலகில் ஊனத்துடன் வாழும் மக்களுக்கு ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ள ஒரே நாடு கனடா ஆகும். பதிவுசெய்யப்பட்ட ஊனமுற்றோர் சேமிப்புத் திட்டம் (RDSP) என்பது ஊனத்துடன் வாழும் மக்களுக்கு ஒரு நீண்டகால சேமிப்பு வாய்ப்பினை வழங்குவதற்காக புதுமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கனடாவில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். 

RDSP என்பது ஒரு ஊனமுள்ள கனடா நாட்டு மக்களின்  நிதிப் பாதுகாப்பிற்கு உதவுவதற்கு 2008 ஆம் ஆண்டு கனடா அரசின் மூலமாக உருவாக்கப்பட்டது.  தனிப்பட்ட பங்களிப்புகள், கனடா அரசின் மூலமாக வழங்கப்பட்ட நிதியுதவிகள் மற்றும் பத்திரங்கள், மற்றும் பல்வேறு முதலீட்டுத் தேர்வுகள் மூலமாக திட்டத்தை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றால் ஒரு RDSP விரைவாக வளர்ச்சியடைய முடியும். 


RDSP என்றால் என்ன?

RDSP என்பது தனிப்பட்ட பங்களிப்புகள், மற்றும் மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் பத்திரங்கள் மற்றும் நிதியுதவிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

  • கனடா ஊனமுற்றோர் சேமிப்பு நிதி - RDSP-க்கு ஒரு நபர் வழங்கும் ஒவ்வொரு $1 பங்களிப்பிற்கு நிகராக மத்திய அரசு $3 வரை மானியமாக வழங்கும் (குடும்ப வருமானத்தைப் பொறுத்து).

  • கனடா ஊனமுற்றோர் சேமிப்புப் பத்திரம் - குறைந்த-வருமானம் உள்ள கனடா நாட்டு மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் $1000 பத்திரம் என 20 ஆண்டுகளுக்கு பங்களிப்பை வழங்கும்.

  • தனிப்பட்ட பங்களிப்புகள் - ஒரு RDSP-க்கு யார் வேண்டுமானாலும் பங்களிப்பை வழங்கலாம் - குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், போன்றோர்!ஒரு RDSP-யை துவங்குவதற்கு உங்களால் தனிப்பட்ட பங்களிப்புகளை வழங்க முடிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 


ஒரு RDSP-யைத் துவங்குவதற்கான தேவைகள்

  • கனடாவில் வசிக்கும் ஒருவராக இருக்க வேண்டும்,
  • ஒரு சமூக காப்பீட்டு எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்,
  • நிதியுதவிகள் மற்றும் பத்திரங்களைப் பெறுவதற்கு 59 வயதுக்கு குறைவானவராக இருக்க வேண்டும் - அல்லது 49 வயதுக்கு குறைவானவராக இருக்க வேண்டும்,
  • ஊனமுற்றோர் வரிச் சலுகைக்கு தகுதி பெற வேண்டும்.RDSP-க்கு இது முக்கியமான தகுதி அம்சமாகும்.ஊனமுற்றோர் வரிச் சலுகை பல்வேறு பலன்களை வழங்குகிறது மேலும் உங்களுக்கு குறைந்த அளவு வருமானம் இருந்தாலும் அதற்கு விண்ணப்பிப்பது பயனுள்ளதாக இருக்கும்.  ஊனமுற்றோர் வரிச் சலுகை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் இங்கே
  • பெரும்பாலான கனடா நிதி நிறுவனங்கள் RDSP-யை வழங்குகின்றன மேலும் பல்வேறு நிதி ஆலோசகர்கள் கூட உங்களது RDSP-யை அமைக்கவும் அதை நிர்வகிக்கவும் உங்களுக்கு உதவ முடியும்.உங்களது RDSP-யை அமைப்பதற்கு உங்களுக்கு உதவி செய்யக்கூடிய தகுதியுள்ள நிதி ஆலோசகர்களின் பட்டியலை திட்டமிடுதல் கூட்டமைப்பு கொண்டுள்ளது.தொழில்முறை சேவைகள் அடைவைப் பாருங்கள் இங்கே.
  • ஒரு RDSP-யைத் துவங்குவதற்கு ஒரு திட்டத்தை வைத்திருப்பவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.ஒரு RDSP-யை அமைத்து அதனை நிர்வகிக்கும் நபர் திட்டத்தை வைத்திருப்பவராக கருதப்படுகிறார்.ஒரு பயனாளி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பவராக இருக்கலாம் அல்லது ஒரு பெற்றோர், துணைவர், பொது-சட்டப் பங்காளர் அல்லது பாதுகாப்பாளர் ஒரு திட்டத்தை வைத்திருப்பவராக இருக்கலாம்.
  • RDSP நிதியை எப்படி செலவிட வேண்டும் என்பதில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.
  • நிதியை தொடர் கட்டணங்களாகவோ அல்லது ஒட்டுமொத்த தொகையாகவோ எடுக்கலாம்.
  • முக்கிய குறிப்பு: குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு அனைத்து நிதிகள் மற்றும் பத்திரம் உங்களது திட்டத்தில் இருப்பதற்கு முன்னால் எடுக்கப்படும் தொகை வரிப்பிடித்தத்திற்கு உட்படுத்தப்படும்.  நிதிகளை எடுப்பதற்கு முன்னால் உங்களது கடைசி பத்திரம் அல்லது நிதியைப் பெற்ற பிறகு 10 ஆண்டுகள் காத்திருந்து உங்களது பலன்களை அதிகரித்திடுங்கள்.
  • ஒன்டாரியோவில், ஒரு நபர் எந்தவிதமான வரம்பற்ற தொகைகளுடன் ஒரு RDSP-யை வைத்திருக்கலாம் மேலும் தங்களது ஒன்டாரியோ ஊனமுற்றோர் உதவித் திட்ட தகுதியை பாதிக்காத வகையில் தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.


உங்களது RDSP-யை அதிகரித்தல்

  • பத்திரங்களைப் பெறுவதற்கும் நிதியுதவிகளை அதிகப்படுத்துவதற்கும் நீங்கள் உங்கள் வருமான வரி அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். 
  • நீங்கள் பத்து ஆண்டுகள் வரையில் உங்களுக்கு தகுதி இருந்து வாங்காமல் விடுபட்ட எந்த பத்திரங்கள் அல்லது நிதியுதவிகளையும் திரும்பக் கோரிப் பெறலாம்.
  • உங்களது RDSP மற்றும் RDSP முதலீடுகளை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் ஒரு RDSP-யை திறந்த பின்னர் 
  • இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் எவ்வளவு பலன் பெறுவீர்கள் என்பதைப் பார்க்க இருக்கக்கூடிய RDSP கால்குலேட்டர்களில்ஒன்றைப் பயன்படுத்துங்கள்.

தயவுசெய்து கவனிக்கவும், எல்லா சொற்களும் ஆங்கிலத்தில் இருந்து சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க பக்கத்தைப் பார்வையிடவும். இங்கே கிளிக் செய்யவும்