Partners for Planning - ஒன்டாரியோ ஊனமுற்றோர் உதவித் திட்டம் - Tamil
YES!
Send me updates on new resources!
YES!
Send me updates on new resources!

ODSP என்பது ஒன்டாரியோவில் ஒரு ஊனத்துடன் உள்ள மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச வருமானம் மற்றும் மருத்துவ உதவியை வழங்கும் ஒரு சமூக உதவித் திட்டமாகும்.

ஒன்டாரியோ ஊனமுற்றோர் உதவித் திட்டத்திற்கு எப்படி தகுதி பெறுவது மற்றும் விண்ணப்பிப்பது என்பதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு சிறந்த முதல் படிநிலையாகும்; எனினும், நீங்கள் ஒருமுறை வெற்றிகரமாக இதற்குத் தகுதி பெற்றுவிட்டால், இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, மற்றும் இதிலுள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பதைப் பற்றியும் பரிந்துகொள்வதும் மிகவும் முக்கியமாகும், அதனால் தேவைப்பட்டால் நீங்கள் தொடர்ந்து பலன்களைப் பெற முடியும்.


ODSP - யைப் பயன்படுத்துதல்

ODSP என்பது வாடகை, உணவு, உடை மற்றும் போக்குவரத்து செலவுகள் போன்ற அடிப்படை வாழ்வுக்கான செலவுகளை சமாளிப்பதற்காக வழங்கப்படுவதாகும்.பரிந்துரைகள், பல் மருத்துவம் மற்றும் கண் பராமரிப்பு, மற்றும் இயக்க சாதனங்களை பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு செய்தல் ஆகியவை மதிப்புமிக்க கூடுதல் பலன்களில் உள்ளடங்கும்.



ODSP-க்கு தகுதி பெறுதல்

  • ஒன்டாரியோவில் வசிப்பவர்
  • ஒரு ஆண்டுக்கு அல்லது அதற்கும் அதிகமான காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற, உங்களது பணி செய்யும் ஆற்றலை, உங்களை நீங்களே கவனித்துக் கொள்கின்ற அல்லது உங்கள் அன்றாட செயல்களில்  கணிசமான அளவு கட்டுப்படுத்துவதாக இருக்கும் ஒரு ஊனமுள்ளவராக இருத்தல்.
  • நிதித் தேவையை நிரூபிக்க வேண்டும்.
    ODSP என்பது ஒரு பொருளாதார-அடிப்படையில் வழங்கப்படும் திட்டமாகும்.அதன் பொருள், நீங்கள் ODSP-க்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுக்கு நிதி உதவி தேவை என்பதை நீங்கள் காண்பிக்க வேண்டும்.இதன் மற்றொரு பொருள் என்னவெனில் நீங்கள் ODSP திட்டத்திற்கு தகுதி பெற்றால், உங்களது தகுதியைப் பராமரிப்பதற்கு நீங்கள்  தெரிந்துகொள்ள வேண்டிய நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளன.உங்களது வருமானம் மற்றும் சொத்துக்கள் ODSP வரம்புகளைக் காட்டிலும் அதிகமாக இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும், அவை யாதெனில்:   
    • ஒரு தனிநபருக்கு ரொக்கமாக மாற்றத்தக்க சொத்துக்களாக $40,000,
    • ஒரு தம்பதிக்கு ரொக்கமாக மாற்றத்தக்க சொத்துக்களாக $50,000.

வருமானம்:

ஒரு தனிநபர் ஒரு மாதத்திற்கு வேலைவாய்ப்பின் மூலமாக வருமானமாக $1,000 வரை அனுமதிக்கப்படுகிறார்.  அந்த முதல் $1,000-க்கு பிறகு வரும் எந்த தொகையும் 75% கொண்டு பெருக்கப்பட்டு ஒரு நபரின் ODSP மாதக் காசோலையில் இருந்து கழிக்கப்படுகிறது.  

கூடுதலாக, ஒரு தனிநபர் அவரது ODSP-யை பாதிக்காத வகையில் 12-மாத காலத்திற்கு ஊனம்-சாராத செலவுகளுக்காக $10,000 வரை தன்னார்வத்துடன் வழங்கப்படுவதைப் பெற அனுமதிக்கப்படுகிறார்.அந்தக் கட்டணங்களில் குடும்பத்தினர் வழங்கும் ரொக்கப் பரிசுகள் அல்லது ஒரு அறக்கட்டளை அல்லது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுக்கப்படும் பணம் ஆகியவை உள்ளடங்கும்

ODSP -க்கு விண்ணப்பிக்க நீங்கள் பின்வரும் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்:

  • சமூக காப்பீட்டு எண் (SIN),

  • OHIP அட்டை,

  • பிறப்புச் சான்றிதழ்,

  • குடியேற்ற ஆவணம்,

  • வருமான வரி அறிக்கை,

  • மற்றும் தற்போது வரையிலான வங்கித் தகவல்


நீங்கள் தயாராக இருக்கும்போது, விண்ணப்பிப்பவர்கள் தொலைபேசி மூலமாக, ஆன்லைன் முறையில் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ODSP அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 

––––––––––––––––––––––––––––––––––
விண்ணப்பிப்பதற்கு நீங்கள் உங்களது தனிப்பட்ட மற்றும் குடும்பத் தகவலைக் கொண்டு படிவங்களைப் பூர்த்தி செய்வீர்கள். 
––––––––––––––––––––––––––––––––––
அடுத்ததாக, நீங்கள் உங்களது வருமானம் மற்றும் சொத்துக்கள், வீட்டுக்கான செலவுகள் மற்றும் வாழ்வதற்கான செலவுகள் ஆகியவை பற்றிய தகவலை வழங்க வேண்டும்.
––––––––––––––––––––––––––––––––––
ஒருமுறை உங்களது விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்த பின்னர், உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்ய, திட்டப்பணியாளர் உங்களுடன் ஒரு சந்திப்பை நிர்ணயிப்பார்.

 


உங்களது ODSP-யை பாதுகாத்தல் மற்றும் நிர்வகித்தல்

ஒவ்வொரு மாதமும் முழு ODSP தொகையை நீங்கள் பெறுவதை உறுதி செய்ய, நீங்கள் கொடுப்பனவுகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.சொத்துக்கள் மற்றும் விலக்குகள், பரம்பரைச் சொத்துக்கள் மற்றும் பரிசுகள், ஒரு ஹென்சன் அறக்கட்டளை மற்றும் RDSP வருமானம் – இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெறுபவரின் ODSP வருமானத்தைப் பாதுகாக்கும் அல்லது கட்டுப்படுத்தும்.

உங்களது ODSP-யை பராமரிக்க ODSP அலுவலகத்திற்கு பெறுபவர் மூலமாக பின்வரும் விஷயங்கள் பற்றி அறிக்கை வழங்கப்பட வேண்டும்: 

  • ODSP-யைப் பெறும் போது வாங்கப்பட்ட அல்லது திரட்டப்பட்ட ஏதேனும் சொத்துக்கள் – இதில் ஒரு புதிய இரண்டாவது கார் அல்லது வீடு அல்லது ஒரு நிதிப் பரிசு ஆகியவை உள்ளடங்கும்.

  • ஒரு மாதத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான $200-ஐக் காட்டிலும் கூடுதலாக சம்பாதித்த ஏதேனும் வருமானம். 

  • பெறுபவரின் சூழ்நிலையில் ஏற்பட்ட ஏதேனும் பொருள் ரீதியான மாற்றங்கள்.


உங்களது உள்ளூர் ODSP அலுவலகத்தைக் கண்டறிய இங்கே கிளிக் செய்யவும்

தயவுசெய்து கவனிக்கவும், எல்லா சொற்களும் ஆங்கிலத்தில் இருந்து சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க பக்கத்தைப் பார்வையிடவும். இங்கே கிளிக் செய்யவும்